May 15, 2025 23:48:22

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் மகன் தஹம் சிறிசேன நேரடி அரசியலில் பிரவேசித்தார்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினரான மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேன, நேரடி அரசியலில் பிரவேசித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட இளைஞர் அணியின் தலைவராக தஹம் சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசியல் பிரவேசம் மற்றும் இளைஞர் அணியின் தலைவராக பதவியேற்றதைத் தொடர்ந்து பொலன்னறுவை- மின்னேரிய பிரதேசத்தில் கூட்டம் ஒன்றையும் நடத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புதிய ஆரம்பம் என்ற தொனிப் பொருளில் அவர் கூட்டங்களை நடத்தி வருகிறார்.

புதிய பயணத்தை ஆரம்பித்த தஹம் சிறிசேனவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.