January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதி முன்னிலையில் ‘மெனிகே மகே ஹிதே’ பாடிய யொஹானி

‘மெனிகே மகே ஹிதே’ பாடல் மூலம் உலகாளாவிய ரீதியில் புகழ்பெற்ற இளம் பாடகி யொஹானி டி சில்வா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை சந்தித்துள்ளார்.

ஜனாதிபதியின் இல்லத்திற்கு சென்ற யொஹானி, அங்கு ஜனாதிபதியையும் அவரின் பாரியாரையும் சந்தித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வேளையில் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கிணங்க, தான் பிரபலமடைய காரணமாக அமைந்த ‘மெனிகே மகே ஹிதே’ என்ற பாடலை அவர் பாடியுள்ளார்.

இதன்போது ஜனாதிபதியும், பாரியாரும் கைத் தட்டி யொஹானியை வாழ்த்தியுள்ளனர்.