May 29, 2025 7:10:51

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மகிந்தானந்தவின் உருவ பொம்மை எரித்து நுவரெலியா விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் நிலவும் உரத் தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவின் உருவ பொம்மையை எரித்து நுவரெலியாவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

நுவரெலியா மாவட்ட விவசாயிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேரணியில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி நுவரெலியா நகரில் இருந்து தபால் நிலையம் வரையில் இந்த பேரணி நடத்தப்பட்டது.

பின்னர் தபால் நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவின் உருவ பொம்மையையும் எரித்தனர்.

இப்போராட்டத்திற்கு நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்களும் கடைகளை மூடி ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.