
வார இறுதி நாட்களில், சமூக ஒன்றுகூடல்களை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
தற்போது அமுலிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறி செயற்படுவோர் தொடர்பில் தொடர்ந்தும் சோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் 158 வீதித்தடைகள் போடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.