
மாகாண போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதால், எதிர்வரும் வியாழக்கிழமை முதல் ரயில் சேவைகள் ஆரம்பிக்கும் என்றும் அன்றைய தினத்திலிருந்து 128 முதல் 130 சேவைகள் தினமும் இடம்பெறும் என்றும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாகாணத்துக்கு உள்ளே மற்றும் மாகாணங்களுக்கு இடையேயான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்த திணைக்கள அதிகாரியொருவர், கண்டி, மாத்தறை, காலி, பெலியத்த மற்றும் சிலாபம் ரயில் நிலையங்களிலிருந்து ரயில் சேவைகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்தார்.