January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு, கிழக்கில் மீனவர்கள் போராட்டம்!

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளைக் கண்டித்து வடக்கு-கிழக்கில்  கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

படகுகளில் இருந்தவாறு மீனவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இழுவைப் படகு தடைச்சட்டத்தினை அமுல்படுத்த கோரி, இன்று காலை 7 மணிக்கு முல்லைத்தீவில் இருந்து இந்தப் போராட்டம் ஆரம்பமானது.

முல்லைத்தீவில் இருந்து பருத்தித்துறை வரை கடல் வழியான படகு பேரணி முன்னெடுக்கப்பட்டது.

கடல் வளத்தினையும், நீரியல் வளத்தினையும் மிகமோசமாக அழிக்கும் இழுவை படகுகளை தடைசெய்யும் 11 ஆம் இலக்க சட்டம் 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டுள்ளது.

எனினும் இந்த சட்டத்தை அமுல்படுத்தாத காரணத்தினால் இழுவைப் படகுகள் தொடர்ச்சியாக கடல் வளத்தினை அழிக்கும் நிலமை தொடர்ந்து வருகின்றது.

இதனை முறையாக அமுல்படுத்த இலங்கையின் கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சரை கோரும் முகமாகவே குறித்த கடல்வழி படகு பேரணி இடம்பெற்றது.

இதேவேளை, குறித்த படகு பேரணிக்கு பலவேறு அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் ஆதரவு வழங்கி அழைப்பு விடுத்திருந்தன.

இந்நிலையில் குறித்த மீனவர் பேரணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட  அரசியல்வாதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

This slideshow requires JavaScript.