January 21, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நவம்பரில் மேலதிக வகுப்புக்களை மீள ஆரம்பிக்க திட்டம்!

நவம்பர் மாதம் 1 ஆம் திகதி முதல் மேலதிக வகுப்புக்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் நிதியமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கிடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

அலரி மாளிகையில் இன்று (16) குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மேலதிக வகுப்புக்களை மீள ஆரம்பிக்கும் போது மேற்கொள்ளப்பட வேண்டிய  நடவடிக்கைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான சுகாதார அமைச்சின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இன்று முதல் அமுலாகும் வகையில் வெளியிடப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டியில் மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை.