November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“நாட்டிற்குள் எப்போது வேண்டுமானாலும் புதிய வைரஸ் நுழையலாம்”; சுகாதார பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை!

இலங்கைக்குள் புதிய கொவிட் வைரஸ் வகைகள் எப்போது வேண்டுமானாலும் நுழைவதற்கான சாத்தியம் உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

“நாடு சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது. துறைமுகங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. எனவே, புதிய மாறுபாடுகள் நாட்டிற்குள் நுழைவதற்கான அபாயம் உள்ளது ”என அவர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டார்.

எனவே, முழுமையாக தடுப்பூசி பெற்றுக் கொண்ட போதிலும், மக்கள் சுகாதார வழிகாட்டல்களை கண்டிப்பாக பின்பற்றுவது அவசியம் எனவும் வைத்தியர் குணவர்தன கூறினார்.

நாட்டில் மொத்த மக்கள் தொகையில் 67 சதவிகிதமானவர்கள் கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸைப் பெற்றுக் கொண்டுள்ளதோடு, 58 சதவிகிதமானவர்கள் இரண்டு டோஸ்களையும் பெற்றுக் கொண்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

எனினும் நாங்கள் திருப்திகரமான நிலையை அடைய வேண்டுமானால், மொத்த சனத் தொகையில் 70 – 80 விகிதம் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியமானது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன கூறினார்.