
சேவைக்கு வருகை தரும் ஆரிசியர்களை அச்சுறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 21 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்நிலையில், தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் சேவைக்கு வர மாட்டோம் என ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.