நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் வலை அதிகரிப்பு உட்பட பல்வேறு பிரச்சினைகளையும் முன்வைத்து எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
கெஸ்பேவ நகரத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் கலந்துகொண்டுள்ளார்.
பொருளாதாரத்தில் அதிசயங்களைச் செய்யக்கூடிய ஏழு மூளைகளைக் கொண்ட ஒருவர் இருக்கின்றார் என பெருமை பேசும் அரசாங்கம், முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது மக்களை ஒடுக்குகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதன்போது தெரிவித்துள்ளார்.
இன்று ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மக்கள் பொருளாதார நெருக்கடியை உணரும் நிலை ஏற்பட்டுள்ளது என்று சஜித் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.