முல்லைத்தீவு, புதுமாத்தளன் பகுதியில் துப்பாக்கி ரவைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து டி-56 ரக துப்பாக்கிக்கான 401 ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சந்தேக நபரிடமிருந்து 2 கிராம் கேரள கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
முல்லிவாய்க்கால் பிரதேசத்தை சேர்ந்த 40 வயது நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவருக்கு அந்த துப்பாக்கி ரவைகள் எப்படி கிடைத்தது என்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.