Photo: Facebook/ bill clinton
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன், திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைரஸ் தொற்றால் பில் கிளிண்டன் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி கலிபோர்னியாவில் உள்ள மருத்துவமனையொன்றில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இவர் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
75 வயதான பில் கிளிண்டன், இரத்த ஓட்டத்தில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், இது கொவிட் வைரஸுடன் தொடர்புடைய தொற்று அல்லவெனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பில் கிளிண்டன் செய்தித்தொடர்பாளர் ஏஞ்சல் யூரேனா டுவிட்டரில் கூறும்போது, ”பில்கிளிண்டன் நல்ல மனநிலையில் இருக்கிறார். அவருக்கு சிறந்த கவனிப்பை வழங்கிய வைத்தியர்கள், தாதிமார்களுக்கும் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.