
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விஜயதசமி – மானம்பூ உற்சவம் இன்று (15) காலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
காலை 6.45 மணிக்கு வசந்த மண்டப பூசையுடன் திருவிழா ஆரம்பமானது. சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நல்லூரின் பண்டைய காலத்தில் உபயோகிக்கப்பட்ட பழைமையான சிறிய குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி அமைதியான முறையில் மானம்பூ உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.