
ஐக்கிய அரபு அமீரகத்தின் ‘எக்ஸ்போ டுபாய் 2020’ கண்காட்சியில் இலங்கை மாணவர்களுக்கு 700 மில்லியன் ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.
எக்ஸ்போ டுபாய் கண்காட்சிக் குழு ஏற்பாடு செய்திருந்த கட்டட வடிவமைப்புப் போட்டியில் மொரட்டுவை பல்கலைக்கழக மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
குறித்த போட்டியில் மாணவர்கள் வெற்றி பெற்றதையும் 700 மில்லியன் ரூபாய் பரிசு கிடைத்ததையும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தக் கண்காட்சியில் இலங்கையின் கண்காட்சிக் கூடத்தை அமைப்பதற்கு செலவாகும் பணத்தொகைக்கு சலுகை கிடைத்துள்ளது.
டுபாய் கண்காட்சியில் இலங்கையின் கண்காட்சி கூடத்தை அமைக்க 600 மில்லியன் ரூபாய் செலவாகும் நிலையில், மாணவர்கள் 700 மில்லியன் ரூபாயை பரிசாகப் பெற்றுள்ளனர்.
மாணவர்கள் இலங்கையின் கண்காட்சி கூடத்தை ‘தண்ணீர்’ என்ற கருப்பொருளில் வடிவமைத்துள்ளதோடு, அது கண்காட்சியின் சிறந்த வடிவமைப்பாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.