July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பு!

நாட்டில் ஒரு கிலோ வெள்ளை சீனியின் மொத்த விலை 130 ரூபா ஆக உயர்ந்துள்ளதையடுத்து சந்தையில் சீனிக்கான பற்றாக்குறை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

வெள்ளை சீனி, பெரிய வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு உள்ளிட்ட பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளதாக சில்லறை விற்பனையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 150 ரூபா முதல் 160 ரூபா வரை உயர்வடைந்தததையடுத்து இவ்வாறு பெரிய வெங்காயத்தின் கிலோ ஒன்றுக்கான சில்லறை விலை 200 ரூபாவாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உள்ளூர் பெரிய வெங்காய அறுவடை காலம் ஆரம்பமாகியுள்ளதால் வெங்காய விலை உயர்வு சாதாரணமானது என்றும் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வெங்காயத்தின் உச்சக்கட்ட விலையாக 400 ரூபா பதிவாகியிருந்ததாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.

இத்தோடு, கொழும்பில் ஒரு கிலோ உள்நாட்டு உருளைக்கிழங்கின் மொத்த விலை 130 முதல் 140 ரூபாய் வரை இருப்பதால், சில்லறை விலை 200 ரூபாயாக உயர்வடைந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.