January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பென்டோரா பேப்பர்ஸ்’ விசாரணைகளுக்கு ஒத்துழைக்கத் தயார்: ரஞ்சன் ராமநாயக்க

பென்டோரா பத்திரங்களில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பான ஆதாரங்களை வெளியிடத் தயாராக இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்க இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதமொன்றை அனுப்பி, இதனைத் தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க அவரது சட்டத்தரணி மூலம் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.

நிரூபமா ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசன் ஆகியோரின் ஊழல்கள் தொடர்பான தகவல்களையும் ஆதாரங்களை முன்வைக்க தான் தயாராக இருப்பதாக ரஞ்சன் குறிப்பிட்டுள்ளார்.

பென்டோரா பத்திரங்களில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்க விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.