
ஆப்கானிஸ்தானில் இருந்து மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு இலங்கை முன்வந்துள்ளது.
இலங்கையின் பாதுகாப்பு தரப்பு இவ்விடயத்தில் பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானுடன் தொடர்புபட்ட போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணைகளுக்கு இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவும் ஒத்துழைக்கிறது.
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் எனக் கூறப்படும் சந்தேகநபர்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டபோது, இந்திய புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
இவ்விடயங்கள் குறித்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு இலங்கை, பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முன்வந்துள்ளன.