
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டு மற்றும் மலையக சிறுமி இஷாலினியின் மரணம் தொடர்பான வழக்கு ஆகியவற்றில் இருந்து ரிஷாட் பதியுதீனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
ரிஷாட் பதியுதீன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், கோட்டை நீதவான் பிணை வழங்கியுள்ளார்.
தலா 5 மில்லியன் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் கீழ் பிணை வழங்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதன்போது, ரிஷாட் பதியுதீனுக்கு வெளிநாட்டு பயணத் தடை உத்தரவொன்றும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிணை வழங்கப்பட்ட பின்னர் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.