
கேகாலை மாவட்டத்தின் வரக்காபொல பகுதியில் வாய்க்குப் பிளாஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில், ஆண் ஒருவரின் சடலத்தைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், பன்னல பிரதேசத்தை சேர்ந்த 43 வயது நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவரை கடந்த 10 ஆம் திகதி முதல் காணவில்லை என்று அவரது மனைவி பன்னல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார் என்று விசாரணைகளில் தெரியவந்துளள்ளது.
பிரேத பரிசோதனைக்காக கேகாலை வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதால் பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.