இலங்கையில் பழைய 60 சட்டங்களை திருத்த நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் மொஹமட் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
சிறைக் கைதிகள் புனர்வாழ்வு மற்றும் சீர்திருத்த இராஜாங்க அமைச்சில் நடைபெற்ற கூட்டம் ஒன்றிலேயே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த 60 சட்டங்களிலும் கடந்த 20 வருடங்களாக எவ்வித சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்ட திருத்த முன்மொழிவுகள் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க அதிகாரிகளும் பொதுமக்களும் நாட்டுக்கான தமது பொறுப்புகளை நிறைவேற்றி, நாட்டின் முன்னேற்றத்துக்கு பங்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.