May 23, 2025 4:27:36

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விமர்சனங்களைத் தொடர்ந்து யொஹானியுடனான புகைப்படத்தை நீக்கினார் ஹரிஸ் ஜெயராஜ்

இந்திய இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ், இலங்கையின் இளம் பாடகி யொஹானி டி சில்வாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை டுவிட்டரில் இருந்து நீக்கியுள்ளார்.

அண்மையில் இந்தியா சென்றிருந்த யொஹானியுடன் தானும் மற்றும் பாடலாசிரியர் மதன் கார்க்கியும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஹரிஸ் ஜெயராஜ் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

போர்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவத்தின் முன்னாள் மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வாவின் மகளின் புகைப்படத்தைப் பதிவிட்டதால், ஹரிஸ் ஜெயராஜ் மீது விமர்சனங்கள் மேலெழுந்துள்ளன.

யொஹானி நீங்கள் மிகச் சிறந்தவர் என்ற வாசகத்துடன் ஹரிஸ் ஜெயராஜ், யொஹானியுடனான புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார்.

இலங்கையில் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த இராணுவத்தை ஹீரோக்களாக புகழ்ந்து பாடியுள்ள யொஹானியை எவ்வாறு பாராட்ட முடியும் என்று தமிழ் ரசிகர்கள் ஹரிஸ் ஜெயராஜை விமர்சித்துள்ளனர்.

விமர்சனங்களைத் தொடர்ந்து ஹரிஸ் ஜெயராஜ், டுவிட்டர் பதிவை நீக்கியுள்ளார்.