January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய இராணுவ தலைமைத் தளபதி- ஜனாதிபதி, பிரதமருடன் சந்திப்பு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இந்திய இராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நராவனே, ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி செயலகத்திலும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவை அலரி மாளிகையிலும் சந்தித்துள்ளார்.

இருநாட்டு இராணுவத்தினருக்கும் இடையே சிறந்த உறவு காணப்படுவதாக சந்திப்பின் ஆரம்பத்திலேயே ஜெனரல் நராவனே சுட்டிக்காட்டியுள்ளார்.

தான் இராணுவ சேவையில் ஈடுபட்டிருந்த காலப்பகுதியில், இந்தியாவில் பெற்ற இராணுவப் பயிற்சிகள் மற்றும் அனுபவங்களை ஜனாதிபதி இதன்போது பகிர்ந்துகொண்டுள்ளார்.

நேர்மறையான இந்த தொடர்பானது, இருநாட்டு மக்கள் மற்றும் அனைத்து மட்டத்திலுமான இருதரப்பு உறவை உறுதிபடுத்துவதற்கு உதவியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயர் பயிற்சிகளை வழங்கல் உள்ளிட்ட இந்திய இராணுவம் மிக நீண்டகாலமாக இலங்கைக்கு வழங்கிவரும் பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பில் இதன்போது பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.

This slideshow requires JavaScript.