
மட்டக்களப்பில் காணி அபகரிப்பு, சட்டவிரோத குடியேற்றம் மற்றும் மண் அகழ்வு உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் தொல்பொருள் திணைக்களத்தின் அத்துமீறல் தொடர்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான நோர்வே உயர்ஸ்தானிகர் மற்றும் நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் ஆகியோரிடம் அவர் இதுதொடர்பாக விளக்கமளித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் துரிதமாக முன்னேற்றும் செயல்பாடுகளில் முதன்மையான தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் இயற்கை அழகுடன் காணப்படும் மட்டக்களப்பு மாவட்ட சுற்றுலா துறையை மேம்படுத்தும் பல திட்டங்கள் பற்றியும் தூதுவர்களுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் இடம்பெற்று வரும் காணி அபகரித்தல், சட்டவிரோத குடியேற்றம் மற்றும் மண் அகழ்வு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்த ஆவணமும் தூதுவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.