சட்ட விரோதமான முறையில் இலங்கைக்கு கடத்தப்பட்ட 2, 925 கிலோ மஞ்சள் கட்டிகள் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, இருவர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கைகளில் 26 மற்றும் 35 வயதுகளையுடைய பேசாலை மற்றும் வங்காலையில் வசிக்கும் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் பள்ளிக்குடா மற்றும் மண்டைதீவு ஆகிய பகுதிகளில் ஆகிய கடற்பகுதிகளில் கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கைகளின் போது இவ்வாறு 2, 925 கிலோவுக்கு அதிகமான மஞ்சள் கட்டிகள் மற்றும் 11 கிலோ ஏலக்காய் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த மோசடிகள் தொடர்பாக 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
11 ஆம் திகதி இந்த சுற்றிவளைப்பின் போது 617.5 கிலோ கிராம் மஞ்சள் கட்டிகள் மற்றும் ஸ்ரீ 11.7 கிலோ கிராம் ஏலக்காய் இவ்வாறு மீட்கப்பட்டதோடு, 2 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
மேலும், ஒக்டோபர் 12 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையில், கைவிடப்பட்ட நிலையில் படகுடன் 1502.8 கிலோ கிராம் மஞ்சள் கட்டிகள் மீட்கப்பட்டன.
அதே தினத்தில் 805.5 கிலோ கிராம் எடையுள்ள மற்றொரு மஞ்சள் கட்டிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு மீட்கப்பட்ட பொருட்கள் மற்றும் படகுகள் யாழ். சுங்கப்பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, இவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்தனர்.