May 24, 2025 0:53:01

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அர்ஜுன் மகேந்திரன் இன்றி பிணைமுறி மோசடி வழக்கை முன்னெடுக்க சட்டமா அதிபர் தீர்மானம்

பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கு விசாரணையை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் அஜான் கார்டியா புஞ்சிஹேவா ஆகியோர் இன்றி தொடரவுள்ளதாக சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.

மேல் மாகாண முதலாவது நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்திற்கு இன்று சட்டமா அதிபர் இதனை அறிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு மத்திய வங்கி பிணைமுறி ஏலத்தின் போது இடம்பெற்ற மோசடி தொடர்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வழக்கின் முதலாவது பிரதிவாதியான அர்ஜுன் மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான இலங்கையின் இராஜதந்திர முயற்சிகளுக்கு சிங்கப்பூரின் சாதகமான பதில்கள் கிடைக்கவில்லையென சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையிலேயே, அர்ஜுன் மகேந்திரன் மற்றும் அஜான் கார்டியா புஞ்சிஹேவா ஆகியோர் இன்றி வழக்கு விசாரணைகளைத் தொடர சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளார்.