
நிதி அமைச்சில் இருந்து கிடைக்க வேண்டிய விலைச் சலுகை கிடைக்காவிட்டால் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியேற்படும் என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே, அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு லிட்டர் பெட்ரோலை 15 ரூபாயாலும் டீசலை 25 ரூபாயாலும் அதிகரிப்பதற்கு ஐஓசி நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனமும் அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் தாம் கவனம் செலுத்தி வருவதாகவும், இதுவரையில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கம்மன்பில தெரிவித்துள்ளார்.