January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மண்ணெண்ணெய், மின் அடுப்புகளின் விற்பனை அதிகரிப்பு

இலங்கையில் மண்ணெண்ணெய் மற்றும் மின் அடுப்புகளின் விற்பனை அதிகரித்துள்ளதாக புறக்கோட்டை ஒன்றிணைந்த தேசிய சுய தொழில் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் சமையல் எரிவாயு விலை அதிகரித்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் முந்தியடித்துக்கொண்டு மண்ணெண்ணெய் அடுப்புகளைக் கொள்வனவு செய்வதாக புறக்கோட்டை வர்த்தக சங்கத்தின் தலைவர் சால்ஸ் பிரதீத் தெரிவித்துள்ளார்.

மின் அடுப்பு மற்றும் சூடேற்றும் தட்டுக்களின் விற்பனையும் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.