May 25, 2025 21:10:38

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 65 பேர் திருகோணமலையில் கைது!

file photo

சட்டவிரோதமாக வெளிநாட்டுக்குச் செல்ல முயற்சித்த 65 பேர் திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய புலனாய்வுச் சேவைக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமையவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

படகு மூலம் வெளிநாட்டுக்கு செல்வதற்காக இவர்கள் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 63 ஆண்கள், பெண் ஒருவர் மற்றும் 4 வயது சிறு குழந்தை ஒன்றும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் சட்டவிரோதமாக நியூசிலாந்துக்கு பயணிக்க முயற்சித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.