
பா.ஜ.க கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் அவர் இலங்கைக்கு வந்தடைந்துள்ளார்.
இலங்கை வந்த சுப்ரமணியன் சுவாமியை இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
அண்மையில் இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவரைச் சந்தித்த போது, ‘அருமை நண்பர்களான ராஜபக்ஷ குடும்பத்தை நான் விரைவில் சந்திக்கவுள்ளேன்’ என்று சுப்ரமணியன் சுவாமி தெரிவித்திருந்தார்.