
இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் யாழ்ப்பாண மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
யாழ். மாநகர சபையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் யாழ் மாநகர முதல்வரினால் உயர்ஸ்தானிகருக்கு நினைவுப் பரிசு வழங்கி வைக்கப்பட்டது.
இந்த சந்திப்பில் யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் இ.ஜெயசீலனும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.