January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நடைபாதை திட்டத்திற்காக நடுவீதியில் மோதும் மக்கள் பிரதிநிதிகள்!

கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டி, ஜயதிலக விளையாட்டு மைதானத்தில அமைக்கப்படும் நடைபாதை தொடர்பில் நகர சபை உறுப்பினர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

நடைபாதைத் திட்டம் தொடர்பாக ஆராய்வதற்காக நாவலப்பிட்டி நகர சபையின் முன்னாள் தலைவர் சசங்க சம்பத் அங்கு சென்றிருந்த போது, அந்த இடத்திற்கு நகர சபையின் தற்போதைய தலைவர் உள்ளிட்ட நகர சபை உறுப்பினர்கள் வந்த நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது இரு தரப்பினரும் வீதியில் ஒருவருக்கு, ஒருவர் தாக்குதல் நடத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

இந்த மோதலின் போது, அங்கு அமைதியின்மை ஏற்பட்ட நிலையில், அந்த இடத்திற்கு சென்ற பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

ஏற்கனவே நடைபாதையொன்று இருக்கும் நிலையில், அங்கு இன்னுமொரு நடைபாதையை அமைக்க திட்டமிடப்படுவதாக நகர சபையின் முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐந்து வருடங்களாக ஆட்சியில் இருந்த முன்னாள் தலைவர் உள்ளிட்ட குழுவினர், தற்போதைய தங்களின் அபிவிருத்திகள் தொடர்பில் பொறாமையில் இவ்வாறு நடந்துகொள்வதாக நகர சபை தலைவர் குறிப்பிட்டுள்ளார்.