June 16, 2025 20:45:08

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய இராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் நரவானே இலங்கை வந்தடைந்தார்

இந்திய இராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவானே உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்தார்.

இலங்கையின் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, இந்திய இராணுவ தலைமைத் தளபதிக்கு வரவேற்பு அளித்துள்ளார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜெனரல் எம்.எம்.நரவானே மற்றும் அவரது குழுவினரை வரவேற்பதில் பெருமிதம் கொள்வதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு மேலும் வலுவடைய இவ்விஜயம் வழிவகுக்கும் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

ஜெனரல் நரவானே இலங்கை ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு செயலாளர், வெளியுறவு செயலாளர் உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளார்.