January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அழைப்பாணை பிறப்பித்தலின் போது நவீன தொடர்பாடல் முறைகளைப் பயன்படுத்த அமைச்சரவை அனுமதி!

குடியியல் வழக்குக் கோவை (101 ஆவது அத்தியாயம்) திருத்தம் செய்வதற்காக சட்டமூலத்தை தயாரிப்பதற்காக நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நீதிமன்ற நடவடிக்கைகளின் போது அழைப்பாணை பிறப்பித்தல் மற்றும் வழங்கல் தொடர்பாக தற்போது காணப்படும் ஏற்பாடுகளை திருத்தம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து நீதி அமைச்சர் நியமித்துள்ள குடியியல் சட்டத் திருத்தங்கள் தொடர்பான குழு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

இதன் படி, வழக்கொன்றின் தரப்பினர்களுக்கு அழைப்பாணை அனுப்பும் போது மின்னஞ்சல் மற்றும் கைத்தொலைபேசி செய்தி உள்ளிட்ட சமகாலத்தில் அதிகமாக பயன்படுத்தும் தொடர்பாடல் முறைகளை பயன்படுத்துவதன் தேவை பற்றிக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த குழு பரிந்துரைத்துள்ள திருத்தங்களை உள்வாங்கி குடியியல் வழக்குக் கோவை (101 ஆவது அத்தியாயம்) திருத்தம் செய்வதற்காக சட்டமூலத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.