
2026 ஆம் ஆண்டுக்குரிய பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு இலங்கை ஆர்வம் வெளியிட்டுள்ளது.
இதுவரையில் 2026 ஆம் ஆண்டுக்குரிய பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு இந்தியா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.
எனினும், போட்டிகளை நடத்தும் உரிமம் இதுவரையில் எந்தவொரு நாட்டுக்கும் வழங்கப்படவில்லை.
2022 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் 2026 ஆம் ஆண்டு போட்டிகளை நடத்துவது யார் என்ற தீர்மானம் அறிவிக்கப்படும் என்று பொதுநலவாய போட்டி ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டுக்குரிய போட்டிகள் பிரிட்டனின் பேர்மிங்ஹமில் நடைபெறவுள்ளன.