January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”மொழிக் கொள்கையை பின்பற்றுவது அவசியம்”: மனோ கணேசனின் பதிவு

இலங்கை இராணுவத்தின் 72 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் அனுராதபுரத்தில் திறந்து வைக்கப்பட்ட மைதானத்தில் நினைவுப் படிகத்தில் தமிழ் மொழி இல்லாமை குறித்து, தமிழ் முற்போக்குக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

டுவிட்டர் பதிவு ஊடாக மனே கணேசன் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் அந்தப் பதிவில், இலங்கையின் முதல் பிரஜை அரசியலமைப்பின் மொழிக் கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

”அடுத்த மூன்று வருடங்களில் கோட்டாபய செய்யப்போகும் பிழைதிருத்தங்களில் மொழிக் கொள்கையை பின்பற்றுவதும் ஒன்றாக இருக்க வேண்டும்” என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.