கொரோனா வைரஸின் தீவிரத்தையடுத்து இதுவரை 51 பொலிஸ் பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது என கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
அந்தவகையில் கொழும்பு மாவட்டத்தில் மாளிகாவத்தை, வாழைத்தோட்டம், டாம் வீதி, பாபர் வீதி,கடற்கரை வீதி,கொத்தட்டுவ மற்றும் முல்லேரியா ஆகிய பொலிஸ் அதிகாரப் பிரதேசங்களுக்கு இன்றிரவு 7 மணி முதல் மீள் அறிவித்தல் வரையில் சமூக முடக்கல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கம்பஹா மாவட்டத்தில் 33 பொலிஸ் அதிகாரப் பிரதேசங்களிலும், கொழும்பு மாவட்டத்தில் 14 பொலிஸ் அதிகாரப் பிரதேசங்களிலும், குருநாகல் மாவட்டத்தில் 5 பொலிஸ் அதிகாரப் பிரதேசங்களிலும், களுத்துறை மாவட்டத்தில் 3 பொலிஸ் அதிகாரப் பிரதேசங்களிலும் தற்போது ஊரடங்கு அமுலில் உள்ளது.