January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். – கொழும்பு இடையே விமான சேவைகளை மீள ஆரம்பிக்கத் தீர்மானம்!

கொவிட் தொற்றுப் பரவல் நிலை காரணமாக இடைநிறுத்தப்பட்ட கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான உள்நாட்டு விமான சேவைகளை நவம்பர் மாத நடுப்பகுதியில் இருந்து மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி, மீண்டும் அந்த விமான சேவைகளை ஆரம்பிக்குமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க விமான நிலைய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

இதன்படி அந்தச் சேவைகளை முன்னெடுப்பதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

2020 மார்ச் மாதத்தில் நாடு முடக்கப்படுவதற்கு முன்னர், இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம், பலாலி விமான நிலையத்திற்கு வாரத்திற்கு இரண்டு முறை விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டன.