இலங்கை வந்த அமெரிக்க சுற்றுலாப் பயணி ஒருவர் அசௌகரியத்திற்கு முகம் கொடுத்தமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுற்றுலாத் துறை அமைச்சர் கோரியுள்ளார்.
இம்மாதம் 7 ஆம் திகதி இலங்கைக்கு வந்த அமெரிக்க சுற்றுலாப் பயணியான ஜோர்ஜ், இலங்கையில் அவர் முகம் கொடுத்த அசௌகரியங்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில், தாம் இலங்கைக்கு வந்தபோது, தமக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி கொள்ளவோ, தனது நிறுவனத்தை தொடர்பு கொள்ள முடியாது போனதால் அவர் ஐந்து மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறியதாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்வம் சமூக ஊடகங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த சம்பவம் குறித்து ஏற்கனவே விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.