வடக்கு மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றார்.
இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி முன்னிலையில் அவர், புதிய ஆளுநராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக 2020 டிசம்பர் மாதத்தில் ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர், வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்க உள்ளதாக அறிவித்து ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அவருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இதன்படி அவர், தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து, இன்று ஆளுநராக பதவியேற்றுள்ளார்.
2020 ஜனவரி முதல் இதுவரையில் வடக்கு மாகாண ஆளுநராக பீ.எஸ்.எம். சார்ள்ஸ் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.