
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையே இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
பல்வேறு பிரச்சினைகளையும் முன்வைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூன்று மாத காலமாக பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்கே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மேல் மாகாண பிரதான சங்கநாயக்கர் முருத்தெட்டுவே ஆனந்த தேரருடன் வருகை தந்த ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள், பிரதமரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்த சந்திப்பில் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் கலந்துகொண்டுள்ளார்.