July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘20 ஆம் சீர்திருத்தத்தை ஒழிப்பதே இலங்கையின் பிரச்சினைகளுக்குத் தீர்வு’: ரணில் விக்கிரமசிங்க

அரசியலமைப்பின் 20 ஆம் சீர்திருத்தத்தை ஒழிப்பதிலேயே இலங்கையின் பிரச்சினைகளுக்குத் தீர்வு இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இணையவழியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் மீண்டும் 19 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை செயற்படுத்தி, பாராளுமன்றத்துக்கு பலத்தை வழங்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு பாராளுமன்றத்தின் பலம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று ரணில் குறிப்பிட்டுள்ளார்.

20 ஆவது திருத்தம் தோல்வியடைந்து உள்ளதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதியைப் பாராட்டுகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் 20 ஆம் சீர்திருத்தத்தின் பின்னர் கொரோனாவுக்கு வேறு அரசாங்கம், அரிசி விலைக்கு வேறு அரசாங்கம், வீட்டுப் பொருளாதாரத்துக்கு வேறு அரசாங்கம் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ரணில் தெரிவித்துள்ளார்.