
இலங்கை அரசாங்கம் கறுப்புச் சந்தை வர்த்தகர்களின் வகிபாகத்தை செய்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன குற்றம்சாட்டியுள்ளார்.
நாட்டில் கட்டுப்பாடுகள் இன்றி விலை அதிகரிப்புகள் இடம்பெற்று வரும் நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நிறுவனங்கள் தன்னிச்சையாக விலை அதிகரிப்புகளை மேற்கொள்வதை அரசாங்கம் அனுமதிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிவாயு, பால்மா, கோதுமை மா, சீமெந்து உட்பட பல்வேறு பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்துவதில் இருந்து அரசாங்கம் விலகி, கறுப்புச் சந்தை வர்த்தகர்களுக்கு பொறுப்புக் கொடுத்துள்ளதாக ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு இந்த அரசாங்கத்தின் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளதோடு புதிய குழுவொன்றைத் தேடுவதாகவும், அந்தக் குழு இப்போது ஐக்கிய தேசியக் கட்சியில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.