January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அதிகரிக்கப்பட்ட விலையில் 75 ரூபா குறைக்கப்பட்டது!

அதிகரிக்கப்பட்ட சமையல் எரிவாயு விலையை குறைப்பதற்கு லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி நேற்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டனின் விலை 1257 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் இருந்து 75 ரூபாவை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 12.5 கிலோ எரிவாயு சிலிண்டர் 2,675 ரூபாவாக சந்தையில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அதிகரிக்கப்பட்ட விலையில் இருந்து 5 கிலோ சிலிண்டரின் விலையை 30 ரூபாவாலும், 2.5 கிலோ சிலிண்டரின் விலையை 14 ரூபாவாலும் குறைப்பதற்கும் அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது.