எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி சுமித் விஜேசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நஷ்டத்தில் இயங்குவதாகவும், நஷ்டத்தில் இருந்து மீட்டெடுப்பதற்கு விலைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து கவனம் செலுத்துமாறு தான் துறைசார் அமைச்சரிடம் கேட்டுக்கொண்டதாகவும் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதிக்கு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் 70 மில்லியன் ரூபாய் நஷ்டமடைந்துள்ளதாகவும், நஷ்டத்தில் இருந்து மீட்டெடுப்பதற்கான வழி விலை அதிகரிப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.