January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நடிகர் ஷாருக்கானின் மகன் பங்கேற்ற கேளிக்கை விருந்தில் போதைப்பொருளை மறைக்க முயன்ற பெண்கள்

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் பங்கேற்ற களியாட்ட விருந்தில் சப்பாத்து மற்றும் சானிட்டரி நாப்கின்களில் போதை பொருள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

கடந்த 2ஆம் திகதி மும்பையில் இருந்து கோவாவுக்கு புறப்பட்ட கார்டிலியா சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பொலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

என்.சி.பி அதிகாரிகள் சொகுசு கப்பலில் சோதனை நடத்திய போது ஆண்கள் தங்களது ஷூக்களிலும் பெண்கள் சானிட்டரி நாப்கனிலும் போதை பொருட்களை மறைத்து தப்ப முயன்றதாக கூறப்படுகிறது.

மத்திய பிரதேசத்தை பூர்விகமாகக் கொண்ட மாடல் அழகி முன் தாமிசாவும் அவரோடு இருந்த பெண்களும் சானிட்டரி நாப்கனில் போதை பொருளை மறைத்து வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது.

ஆர்யன் கான் உள்ளிட்டோர் தங்களது ஷூக்களில் போதை பொருட்களை மறைத்து வைத்திருந்ததை பறிமுதல் செய்த என்.சி.பி அதிகாரிகள் அவற்றை வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

‘புட்பாலை’ என்ற போதைப்பொருளை கொண்டு வருமாறு போதைப் பொருள் தரகரிடம் ஆர்யன் கானின் வாட்ஸ்அப் குறுந்தகவல் பரிமாற்றங்களில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது கேளிக்கை விருந்து நிகழ்ச்சியில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த 25 அதிகாரிகள் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது .

பெண்கள் உட்பட 6 அதிகாரிகள் மாறு வேடத்தில் சொகுசு கப்பலில் பயணிகளோடு பயணிகளாக இருந்து கேளிக்கை நிகழ்வில் போதைப்பொருள் பயன்படுத்தியதை கண்டுபிடித்து பறிமுதல் செய்து குறித்த நபர்களை கைது செய்துள்ளனர்.