July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

லாஃப்ஸ் நிறுவனமும் சமையல் எரிவாயு விலையை அதிகரித்தது!

‘லிட்ரோ’ நிறுவனத்தின் சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து, லாஃப்ஸ் நிறுவனமும் எரிவாயு விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

இதன்படி 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 984 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

புதிய விலை அதிகரிப்புக்கமைய 12.5 கிலா கிராம் சிலிண்டர் ஒன்று சந்தையில் 2,840 ரூபாவுக்கு விற்பனையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 393 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ நிறுவனம் 12.5 கிலோ கிராம் சிலிண்டர் ஒன்றின் விலையை 1257 ரூபாவால் உயர்த்தியமை குறிப்பிடத்தக்கது.