
இலங்கையில் கோதுமை மாவின் விலை கிலோ ஒன்றுக்கு 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக பீரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இந்த விலை அதிகரிப்பு ஒக்டோபர் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என்று அந்த நிறுவனஙகள் தெரிவித்துள்ளன.
இதேவேளை 50 கிலோ சீமெந்து மூடையொன்றின் விலை 93 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு விலை 1257 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.