
அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரவாவிக்கு அருகில், புதையல் தோண்டியதனூடாக பெற்றுக் கொள்ளப்பட்டதாக கூறப்படும் புத்தர் சிலையொன்றை 60 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற மூவரை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
மிஹிந்தலை, கஹட்டகஸ்திகலிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 40, 43, 45 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் அநுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் விசாரணைகளின் பின்னர் அநுராதபுரம் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.