July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கெரவலபிட்டி யுகதனவி விவகாரத்தில் இறுதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை’

கெரவலபிட்டி யுகதனவி மின் நிலைய ஒப்பந்தம் குறித்தும் பல்வேறு தரப்பினர் பல கருத்துக்களை முன்வைக்கின்றனர். ஆனால் இப்போது வரையில் ஒப்பந்தம் குறித்த இறுதி நிலைப்பாடு எட்டப்படவில்லை என வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கெரவலபிட்டி யுகதனவி உடன்படிக்கை விவகாரத்தில் அரசாங்கதிற்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், அமைச்சரவையிலும் அமைச்சர்கள் விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில உள்ளிட்ட சிலர் முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளனர்,

கெரவலபிட்டி யுகதனவி மின் உற்பத்தி விவகாரத்தில் அரசாங்கமாக பல்வேறு மாற்றுக் கருத்துக்கள் அமைச்சர்களினால் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடு என்ன என்பது இன்னமும் உரிய தரப்பினரால் முன்வைக்கப்படவில்லை.

இந்நிலையில், வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இவ்வாறான கருத்தொன்றை முன்வைத்துள்ளதுடன், இந்த விவகாரம் தற்போதும் கலந்துரையாடல் மட்டத்திலேயே உள்ளது எனவும், சகல தரப்பினரதும் கருத்துக்களுக்கு செவி மடுத்து நாட்டுக்கு எது பொருத்தமானதோ அதனையே நாம் முன்னெடுப்போம். இந்த விடயத்தில் இறுதி உடன்படிக்கை எதனையும் அரசாங்கமாக நாம் செய்யவில்லை என கூறியுள்ளார்.