July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

லிட்ரோ சமையல் எரிவாயு விலை 1,257 ரூபாவால் அதிகரிப்பு!

இலங்கையில் லிட்ரோ நிறுவனத்தின் சமையல் எரிவாயு விலைகள், ஒக்டோபர் 10 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,257 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அதன் புதிய விலை 2,750 ரூபாவாக அமையும்.

அத்தோடு, 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலையை 503 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அதன் புதிய விலை 1,101 ரூபா ஆகும்.

இதேவேளை, 2.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலையை 231 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் புதிய விலை 520 ரூபாவாக இருக்கும் எனவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.